குங்குமம்

தினம் தினம் யுத்தம் ,

தேகம் எங்கும் இரத்தம் ,

ஒரு நாள் உன் நெற்றியில் இடம் பிடிக்க

ஒவ்வொரு பிடி குங்குமமும் தினம் தமக்குள் போரிட்டு

இரத்தம் சிந்திச் சிந்தி சிவந்ததுவோ???

அத்தனைச் சிறிய சிமிழிக்குள், எத்தனை ஆசையுடன் காத்திருக்கும்

உன் விரலின் வரவை எண்ணி...


ஐயம்

இதுவரை இல்லாமல் இன்று புதிதாய்

இறப்பினை கண்டு பயம் கொள்கிறேன்,

இறந்த பின்னும் உன்னை நினைத்திடும் சுகம் கிடைக்குமா என்று தெரியாமல்...


சேலையோர நூலிழைத் தீண்டினால்

சோலைத் தென்றலே !!

உன் சேலையோர நூலிழைத் தீண்டினால் போதும்

சாலையோர வாழைக் குலையும் தலை தூக்கி பார்த்திடுமே...


வெட்கம் !

வெய்யோனே!!


நட்ட நடு நெற்றி தன்னில்

நீ இட்ட ஒரு முத்தத்தினில்

வெட்கம் கொண்டே சிவக்குது கீழ் வானம்

நீ கீழிறங்கும் போதினிலே;


கண் கொள்ளாக் காட்சி அதை காணாமல்

நீ போனாயோ

கண் காணாமல்...