பிரிவில்லை நெஞ்சமே!!
வெகு நாள் நான் உனைக் கண்டாகுதடி,
நீ இன்றி என் ஜீவன் சாகுதடி;
வெகு நாளாய் உன் நிழல் அது தீண்டாது, நெஞ்சம்
எனது மாண்டது!!

சுடுகாடும் சுகம் தான் உன்
சுண்டுவிரல் என்னை சூழ்ந்திடும் நொடி.

தித்தித்திடும் வேப்பஞ்சாறும் உன் திருக்
கரங்கள் தீண்டினாலடி;
எத்திக்கும் சுவைக் கசியும் தீந்தேனும், துளி
கசக்குதடி, இதயத் துடிப்புணரும் தொலைவில் என் இனியவள்
இல்லாததாலே...

உன் விரல் பற்றியிருக்கும் நொடி
சூரியனும் என்னை சுட்டதில்லை,
விலகி நீ நின்றாய் பெண்ணே! இங்கு,
குளிர் புனலும் எனக்கு கொல்லியிடுதே!!

சுவாசம் குளிற
உன் வாசம் தாராயோ, மென் தளிறே !!!

உன் வாசத்திற்காகவே சுவாசிக்கும் எந்தன் நெஞ்சம் தான்
நீ அறியாயோ கண் மலரே ?

No comments:

Post a Comment