சத்தமின்றி மலர்கள் மலரும், என்பதெல்லாம் பொய்


புதியதோர் உலகம்,
சுற்றிலும் வெள்ளாடை மானிட கூட்டம்,
முகத்திரையும் கையில் உரையும் அணிந்தோரை பார்த்து,
பயந்து போனதோ என்னவோ!? பாவம்!!

உலகம் முழுதும் எதிரொலிக்க, அழுதுக் கொண்டு, ஓர்
உயிர் மண்ணில் தோன்றிற்று;

சத்தமின்றி மலர்கள் மலரும், என்பதெல்லாம் பொய் என்று நிரூபித்தது ஓர் பூவையின் பிறப்பு.


முதல் முறை பார்க்கையில், அன்னையும் அந்நியமே!

குழப்பத்துடன் பார்திருக்கையில்,
அவள் தன் பட்டு மேனியும், பஞ்சு
விரல்களும் பிடித்து,
மகிழ்ச்சி கடலில் மூழ்கினாள்.

எனக்கும் கிடைத்திடாத வரம்,
உண்மையில் அவள் தாய் தவம் செய்தவள் தான் போலும்!!!

2 comments:

  1. //சத்தமின்றி மலர்கள் மலரும், என்பதெல்லாம் பொய் என்று நிரூபித்தது ஓர் பூவையின் பிறப்பு.//

    அருமைங்க...

    ReplyDelete