கோவணம் ஜொலிக்குது !!!


கட்டிடம் என்று கட்டி, அதனுள்
கட்டம் ஒன்று கீறி,
நீ மட்டம், மணக்கும் என்
மலம் மட்டும் என்றுச்
சட்டைப் போடாதான் ஓர்
சட்டம் போட்டே நம்மை எட்ட நிறுத்துறான்...

ஏன்டா!!
மும்பை மாடல் அழகி அளவிற்கும் உங்கள்
சாமிக்கு தமிழ் தெரியாதா?
பிறகு எதற்கடா ‘எல்லாம் அறிந்தவன்
அவன் ஒருவனே’ என்று பொய் பிரச்சாரம்?

தானே தெய்வமாக,
தன் மொழியே தெய்வ மொழியாக,
சூழ்ச்சி செய்தவனின் சொல்லுக்கு
கூட்டத்தோடு கூட்டமாய் தலை அசைத்த என்
முன்னோர் மூவாயிரம் பேராயினும்,
அத்தனை பேரையும்
சுட்டெரிக்கும் சினம் என் எட்டு முதல் கொண்டேன்...

நாளொறு கோவில் இங்கு முளைக்குது,
மூளை முடுக்கெல்லாம் இவனுங்க பாட்டு தான் ஒலிக்குது.
திருவிழான்னு தெருவெல்லாம் இவங்க கோலம் தான் நிறைக்குது,
வழி கேட்டா கோலம் போடுற பொம்பல முரைக்குது;


சாமி கோவணம் ’தக தக’னு ஜொலிக்குது, பூமியில
எத்தனையோ குடிசைக் கூரை பல் இளிக்குது...

இதெல்லாம் சொன்னாலும்,
எவனுக்கு தான் உறைக்குது?

1 comment: