வின்மீண்களுடனே நீ வாழ்வாய்வானம் தாண்டும் ஆசை சுவாலைகள்
மேகத்திற்கு தீயிட்டு தேகத்திற்கு அனல் மூட்ட,
உயிரும் செந்தணழில் வேகையிலே,

பார்வையாலே குளிர் ஊட்டி,
பனியே,
என் உயிருக்குள் ஈரம் சேர்த்தாய்.

உறைந்தேன்!
உறைந்த நெஞ்சத்தில் உனை வடித்தேன்
நிறைவடையும் முன்னே,
என் விரலில் உலியும் பாய
இயற்கையை சபித்தேன்.
வலியில் துடித்தேன்.

உயிர் சிலையும் நிறைவடைய
உனக்கும் அதை காட்ட,
துணிச்சலுக்கும் தயக்கதுக்கும் இடையில் உதைப்பட்டேன்.

ஒரு வழியாய்,
கண்டாய், உடன் எனை ஏற்றுக் கொண்டாய்,
பேரின்பத்தில் எனை மூழ்கடித்துக் கொன்றாய்.

ஈசல் அளவினது என் இதயம்
அதில்
இமயம் அளவினது இன்பம் எப்படி கொள்ளும்?

மூச்சும் திணறிற்று!

பொடியன் என
ஆக்கினாய் எனை !

மென் காற்றில்

எத்திக்கும்

பயணிக்கும்

சின்னஞ்சிறு மகரந்தமும் இன்று,
வெண் பனிக்கு மாற்றாய்
மஞ்சல் பனி மூடிய இமயம் என வளர்ந்து
எனையும் சிறைக் கொள்ளும்!

மலருக்குள் எனை தள்ளினாய்,
ஓர் துளி தேனில் மூச்சிறைக்க நீந்தச் செய்தாய்.

மென்மலர் மேலமர்ந்து வண்டுகள்
தேனுண்டு உச்சுக் கொட்டும் சப்தம்
இடி சப்ததின் மத்தியிலும் இரசிக்க பழக்கினாய்!

எத்தனைப் பெரிய இன்பங்கள் பரிசளித்தாய்!


சுவாசக் காற்றிற்கும் என்னுள் இடம் இல்லாமல்
இனபத்தால் உயிரினை நிறைத்தாய்!


இத்தனைச் சிரிய இதயம் எனதே, அதில்
உனை நானும் எப்படி
அடைப்பேனடி?

வந்தமைக்கும்,

தந்தமைக்கும்,

கண் இமைக்கும்

காலமெல்லம் கடமைபடுவேன்

விடைக் கொடுத்து செல்வாய், 

வின்மீண்களுடனே நீயும் வாழ்வாய்!

No comments:

Post a Comment